1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (13:42 IST)

அதிமுகவில் ஆளக்கூடிய அதிகாரம் யாரிடம்? மழுப்பும் ஈபிஎஸ் - ஓபிஎஸ்!!

அதிமுகவுக்கு ஒரே தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறியதற்கு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் பதிலளித்துள்ளனர். 
அதிமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மதுரை ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுகவுக்கு ஒரே தலைமை தேவை. யார் கையில் அதிகாரம் உள்ளது என்றே தெரியவில்லை. ஜெயலலிதா போல் கழகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம்.
கழகத்துக்கு பொதுச் செயலாளரை நியமிக்க வேண்டும். ஜெயலலிதாவை விட அதிகளவில் நலத்திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார். அவரை பொதுச் செயலாளராக நியமிப்பது குறித்து பொதுக்குழுதான் முடிவு செய்யவேண்டும் என பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மழுப்பும் வகையில் பதிலளித்துள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது, அதிமுக தொண்டர்கள் ஆளக்கூடிய கட்சி; இதில் எல்லாருமே தலைவர்கள்தான். அதிமுகவில் கோஷ்டி பூசல் உள்ளதாக கூறப்படுவது தவறான தகவல் என தெரிவித்தார். 
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் சொல்லி வைத்தார் போல, ராஜன் செல்லப்பாவின் பேட்டியின் முழுமையான விவரங்களை பார்த்த பிறகு அது குறித்து பதிலளிக்கிறேன் என மழுப்பிவிட்டு சென்றனர்.