திமுகவை வீழ்த்த தினகரனுக்கு அதிமுக ஆதரவா?
வரும் ஜனவரி 28ஆம் தேதி நடைபெறவுள்ள திருவாரூர் தேர்தலில் திமுகவை தோற்கடித்தே ஆகவேண்டுமெனில் அதிமுகவுக்கு தினகரனோ அல்லது தினகரனுக்கு அதிமுகவோ ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்
அதிமுக-தினகரன் தரப்பில் இருந்து ஒருசிலர் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், திருவாரூர் இடைத்தேர்தலில் தினகரன் வேட்பாளருக்கு அதிமுகவும், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் நடைபெறும்போது அதிமுக வேட்பாளருக்கு தினகரன் ஆதரவும் கொடுக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது
இருவருக்கும் பொது எதிரி திமுக என்ற வகையில் திமுகவை வீழ்த்துவதற்கே இந்த தற்காலிக கூட்டணி என்றும், 18 தொகுதிகள் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடருமா? என்பதை அந்த சமயத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் இருதரப்பினரகள் பேசிக்கொண்டதாக செய்திகள் பரவி வருகிறது.
ஆளுங்கட்சியின் அரசு அதிகாரம், தினகரனின் பணபலம் மற்றும் சொந்த தொகுதி என்ற பலம் ஆகியவை இணைந்தால் மு.க.ஸ்டாலினே திருவாரூரில் போட்டியிட்டாலும் வெற்றி பெற்றிடலாம் என்பதே இருதரப்பினர்களின் கருத்தாக உள்ளது.