செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 16 மார்ச் 2021 (08:18 IST)

மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா பாதிப்பு! – அதிர்ச்சியில் அம்மாப்பேட்டை

அம்மாப்பேட்டை பள்ளி மாணவிகளுக்கு கொரோனா உறுதியான நிலையில் மாணவிகளின் பெற்றோர்கள் சிலருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் படித்து வந்த மாணவிகள் சிலருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 56 மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த பள்ளி மூடப்பட்ட நிலையில் மாணவிகளின் பெற்றோர், உறவினருக்கும் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 350 பேரிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 5 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அம்மாப்பேட்டையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.