புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (13:25 IST)

பட்டபகலில் போலீஸை பட்டாக்கத்தியால் வெட்ட முயற்சிக்கும் டிரைவர்- அதிர்ச்சி வீடியோ

டெல்லியில் போக்குவரத்து மிகுந்த சாலை ஒன்றில் ஆட்டோ டிரைவர் ஒருவர் பட்டாக்கத்தியை வைத்து போலீஸாரை தாக்க முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லியின் சாலை ஒன்றில் கார் டிரைவர் ஒருவருக்கும், ஆட்டோ ஓட்டும் சர்தார்ஜி டிரைவர் ஒருவருக்கும் ஏதோ வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து பக்கத்தில் இருந்த போலீஸ் அதிகாரிகளிடம் சென்று தெரிவித்துள்ளார்.

போலீஸார் சென்று அந்த சர்தார்ஜியை விசாரிக்கும்போது அவர் திடீரென தனது உறையில் இருந்த பட்டாக்கத்தியை உருவிக்கொண்டு சரமாரியாக தாக்க தொடங்கினார். இதை கண்டு அதிர்ந்த போலீஸ் சற்று பின்வாங்கினர். உடனே ஒருவர் சர்தார்ஜியை தாவி பின்னால் பிடித்துக் கொண்டார். போலீஸாரும் அவரை வளைத்து பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தனது போனில் வீடியோ எடுத்த ஒருவர் இதை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.