திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (12:13 IST)

11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதலாம்: செங்கோட்டையன்

கடந்த ஒருவருடமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டு வந்தபோதிலும் அமைச்சர் செங்கோட்டையன் அவர்களின் கல்வித்துறை மீது அதிக புகார்கள் இல்லை. மேலும் புதிய பாடத்திட்டங்கள், நீட் தேர்வுக்கு பயிற்சி ஆகிய முக்கிய அம்சங்கள் பொதுமக்களையும், மாணவர்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்தாலும், சிக்கல் இல்லாமல் 12-ம் வகுப்பை தொடரலாம் என்று அமைச்சர் செங்கோட்டையன் சற்றுமுன் அறிவித்துள்ளார். இதனால் 11ஆம் வகுப்பில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு ஒரு வருடம் வீணாகாது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கணினி மூலம் பாடத்திட்டங்களை பயிற்சி அளிக்க 7 அரசு பள்ளிகளை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தத்தெடுப்பதாகவும் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.