1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:09 IST)

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.1157 கோடி ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மூலதனமான நிதியாக ரூபாய் 1157 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. m
 
2021 - 22 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை நிதியாக ரூ 165 கோடி விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது 
 
மேலும் ஐந்தாவது மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் கீழ் ரூபாய் 1157 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூபாய் 133 கோடியும் மாவட்ட அளவிலான திட்டங்களை செயல்படுத்த ரூ.632 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது