1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 பிப்ரவரி 2024 (16:07 IST)

மன்சூர் அலிகானுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

த்ரிஷா உள்பட  மூன்று பேர் மீது மானநஷ்ட வழக்கு பதிவு செய்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அபராதம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் அதற்கு த்ரிஷா , குஷ்பூ , சிரஞ்சீவி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர் 
 
இதனை அடுத்து த்ரிஷா உள்பட 3 பெயர்கள் மீது நடிகர் மன்சூர் அலிகான் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மன்சூர் அலிகான் வழக்கை தள்ளுபடி செய்ததோடு ஒரு லட்சம் அபராதம் விதித்தார் 
 
இந்த நிலையில் ஒரு லட்சம் அபராதத்தை செலுத்த தனக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கூறிய நிலையில் திடீரென அவர் தனது அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மன்சூர் அலிகானுக்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த அபராத உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் அதே நேரத்தில் த்ரிஷாவுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய மனுவையும் தள்ளுபடி செய்தார்
 
Edited by Siva