திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 25 செப்டம்பர் 2024 (11:49 IST)

ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கையா? விசிக தலைவர் திருமாவளவன் பதில்..!

ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி முடிவு செய்யும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்த போது, 'சினிமாவில் இருந்து வந்தவர்களே துணை முதல்வராகும்போது, 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் எங்கள் தலைவர் திருமாவளவன், துணை முதல்வராக கூடாதா?' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருடைய இந்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்தே அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த சூழலில், ஆதவ் அர்ஜுனின் கருத்தால் திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் எங்கள் சலசலப்பும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.

மேலும்  உட்கட்சி விவகாரங்களில் நிர்வாகிகள் பேசி முடிவு எடுப்பார்கள்' என்றும், 'ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றும் தெரிவித்தார்."

Edited by Mahendran