செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (22:15 IST)

டெல்லி வரை இபிஎஸ் பற்றிய பேச்சுதான்-ராஜேந்திர பாலாஜி

admk
சிவகாசியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி   டெல்லி வரை இபிஎஸ் பற்றிய பேச்சுதான் என்று தெரிவித்துள்ளார்.

18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
தமிழ் நாட்டில் அதிமுக தலைமையில் தேமுதிக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளன.
 
இந்த நிலையில், இன்று சிவகாசியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:
 
எந்த சேனலை பார்த்தாலும் எடப்பாடி பழனிசாமியை பற்றிய பேச்சுத்தான் இருக்கிறது. கன்னியாகுமரி முதல் டெல்லி வரை எடப்பாடி பழனிசாமியைப் பற்றித்தான் எல்லோரும் பேசுகிறார்கள்.
 
எடப்பாடி பழனிசாமி பின்னால் 2 கோடி தொண்டர்கள் உள்ளனர்.  அவர் உள்ளதை பேசுபவர், நல்லதை செய்பவர், எளிமையானவர், வலிமையானவர், எது வந்தாலும் சந்திக்கும் திறன் உள்ளனர் இபிஎஸ் என்று தெரிவித்தார்.
 
மேலும், எல்லோருக்கும் எதையும் செய்பவர், அள்ளி அள்ளி கொடுப்பவர் எடப்பாடி பழனிசாமி என்று தெரிவித்துள்ளார்.