வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 28 மார்ச் 2024 (18:13 IST)

நான் வெற்றி பெற்றால் இலவச சிகிச்சை மேற்கொள்ளலாம்- ஏ.சி.சண்முகம்

ac shanmugam
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது. 
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில், தமிழ் நாட்டில்  பாஜக கூட்டணியில் பாமக, த.மா.க, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ள நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்மனுதாக்கல் செய்தனர்.
 
இந்த நிலையில், வேலூர் தொகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும் புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏ.சி சண்முகம் இன்று  வேலூரில்  தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது;  நான் வேலூரில் வெற்றி பெற்றேன் என்றால் சென்னையில் உள்ள என்னுடைய  மருத்துவமனையில் மருத்துவம் பார்த்துக் கொள்ளலாம். ஹார்ட் ஆபரேசன் மற்றும் கிட்னி பிரச்சனைகள் உள்ளவர்கள் இங்கிருந்து இலவச சிகிச்சை மேற்கொள்ளலாம் என்று உறுதியளிக்கிறேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்துள்ளார்.