புதன், 9 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 28 மார்ச் 2024 (21:25 IST)

அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை- அதிமுக புகார்

annamalai
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.  நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதில் குளறுபடி இருப்பதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து கோவையில் அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:   
 
Indian Non Judical பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்காக  India Court Free பத்திரத்தில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
ஐ.ஐ.எம்-ல் படித்ததாக கூறும் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.