1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 17 மே 2021 (06:30 IST)

கொரோனா பரவலை தடுக்க அனைத்து கட்சி குழு: விஜயபாஸ்கரும் உள்ளார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அனைத்து கட்சி குழு ஒன்றை அமைத்துள்ளார்.
 
அந்த குழுவில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்துக் கட்சி குழுவில் உள்ள 13 எம்எல்ஏக்களின் விபரங்கள் பின்வருமாறு
 
1. திமுக - மருத்துவர் நா.எழிலன்
 
2. அதிமுக - மருத்துவர் சி. விஜய பாஸ்கர்
 
3. காங்கிரஸ் - ஏ.எம். முனிரத்தினம்
 
4. பாமக - ஜி.கே. மணி
 
5. பாஜக - நயினார் நாகேந்திரன்
 
6. மதிமுக - சதன் திருமலைக்குமார்
 
7. விசிக - எஸ்.எஸ். பாலாஜி
 
8. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - வி.பி. நாகை மாலி
 
9. இந்திய கம்யூனிஸ்ட் - தி. ராமசந்திரன்
 
10. மனித நேய மக்கள் கட்சி - ஜவாஹிருல்லா
 
11. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி - ரா. ஈஸ்வரன்
 
12. தமிழக வாழ்வுரிமை கட்சி - வேல்முருகன்
 
13. புரட்சி பாரதம் - பூவை ஜெகன் மூர்த்தி