திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 மே 2021 (11:58 IST)

திரைப்பட தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி !!

பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார். 

 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். முதல்வரின் வேண்டுகோளுக்கு இணங்க பலர் நிதி வழங்கி வரும் நிலையில் திரைப்பிரபலங்களும் நிதி வழங்கியுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று நடிகர் அஜித்குமார் கொரோனா நிவாரண பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நிதி வழங்கினார். இதனிடையே இன்று, திரைப்பட தொழிலாளர்களுக்கு அஜித் உதவி செய்துள்ளார். ஆம், பெப்சி சினிமா தொழிலாளர் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு உதவ அஜித் ரூ.10 லட்சம் நிதி உதவி அளித்துள்ளார்.