வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (22:34 IST)

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை: கைவிடப்படுமா? கால அவகாசம் கொடுக்கப்படுமா?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மத்தை விசாரணை செய்ய  தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையிலான ஆணையம் தற்போது தீவிரமாக விசாரணை செய்து வருகிறது. இந்த விசாரணை ஆணையத்திற்கு 6 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் ஆணையரின் வேண்டுகோளுக்கு இணங்கி மேலும் ஆறுமாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த கால அவகாசமும் வரும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி முடிவடையவுள்ளதால் மேலும் கால அவகாசம் கேட்க ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.  

ஆறுமுகச்சாமி ஆணையத்திற்கு மேலும் ஆறுமாத காலம் அவகாசம் கொடுக்கப்படுமா? அல்லது இந்த விசாரணை நிறுத்தப்படுமா? என்பது தமிழக அரசு எடுக்கும் முடிவை பொருத்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.