செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 8 அக்டோபர் 2018 (13:30 IST)

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருதா? - கொதிக்கும் நெட்டிசன்கள்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது அளிக்கப்பட வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருப்பது கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

 
டெல்லியில் இன்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென்றும், சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.
 
இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு  பாரத ரத்னா விருது கேட்பது தவறான முன்னுதாரணம் என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.