திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 29 ஜூலை 2019 (16:17 IST)

அத்திவரதர் குறித்த அனைத்து வழக்குகளும் தள்ளுபடி!

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி தரும் அத்திவரதரை தரிசனம் செய்ய தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரம் நோக்கி வருகை தந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு போதுமான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்கவில்லை என்பது உள்பட 6 வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் அனைத்தையும் ஜூலை 29 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதன்படி இன்று இந்த வழக்குகள் அனைத்தும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அத்திவரதர் வைணவம் தொடர்பான 6 வழக்குகளையும் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணை ராணுவ பாதுகாப்பு, மூலவர் தரிசனத்திற்கு அனுமதி, குளிர்சாதன வசதி ஆகியவை இந்த ஆறு வழக்குகளில் சில என்பதும் இந்த வழக்குகள் உள்பட ஆறு வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
மூலவர் தரிசனத்திற்கு அனுமதி அளிப்பது பற்றி பரிசீலித்து வருவதாக தமிழக அரசு இந்த வழக்கின் விசாரணையின்போது பதில் மனு தாக்கல் செய்தது. தமிழக அரசின் இந்த விளக்கத்தை ஏற்று அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பக்தர்களின் வசதிக்காக தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.