புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (15:25 IST)

காசோலை மோசடி வழக்கு – சிறைக்கு செல்லும் காங்கிரஸ் பிரமுகர் !

காசோலை கொடுத்து மோசடி செய்த வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் அன்பரசுவுக்கு அளிக்கப்பட்ட இரண்டு ஆண்டு தண்டனையை சென்னை உயர்நீதிமனறம் உறுதி செய்துள்ளது.

காங்கிரஸ் முன்னாள் எம்பி அன்பரசு, ராஜீவ்காந்தி கல்வி அறக்கட்டளை செலவுக்காக, பைனான்சியரிடம் 35 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதைத் திரும்ப காசோலையாகக் கொடுக்க அந்த காசோலை திரும்பியுள்ளது. இதனையடுத்து பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா அன்பரசு, அவரின் மனைவி கமலா அன்பரசு அறக்கட்டளை நிர்வாகி மணி ஆகியோருக்கு எதிராக  2008ல் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்  மூவருக்கும் தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மணி, அன்பரசு (கமலா அன்பரசு இறந்து விட்டார்) இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இன்று நீதிமன்றம் இருவருக்கும் தண்டனையை உறுதி செய்துள்ளது.