தடையை மீறி விநாயகர் ஊர்வலம்; இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் கைது!
தடையை மீறி விநாயகர் ஊர்வலம்; இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் கைது!
சென்னையில் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
நேற்று விநாயகர் சதுர்த்தியை ஒட்டி அமைக்கப்பட்ட சிலைகள் ஊர்வலமாக சென்று கரைக்கப்பட்டன. திருவான்மியூர் காசிமேடு பாலவாக்கம் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கட்டப்பட்ட நிலையில் ஒரு சில இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்ல அனுமதி கிடையாது என காவல்துறை தெரிவித்திருந்தது. அதில் ஒன்று திருவல்லிக்கேணி பகுதி ஆகும்
இந்த பகுதி வழியாக பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக தடையை மீறி சென்றதை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலத்தை கொண்டு சென்றதாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது