ஸ்டாலினை சீண்டி, மோடிக்கு ’ஐஸ் ’ வைக்கிறாரா மு.க.அழகிரி ?

alakiri
Last Updated: வியாழன், 7 மார்ச் 2019 (13:31 IST)
கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.அழகிரியை இன்னமும் திமுகவில் சேர்க்காததால் திமுக தலைவரும் தன் தம்பியான ஸ்டாலின் மீது ஏகப்பட்ட மனஸ்தாபத்தில் இருக்கிறார் முக. அழகிரி.
அவ்வப்போது ஸ்டாலினை சீண்டுவதாகத் துடுக்காகப் பேசி திமுகவை சூடேற்றுவதுமாகவே இருந்தார் அழகிரி. தற்போது அவரது மகன் இந்த வேலையைப் கச்சிதமாக செய்து வருகிறார். விஜயகாந்தை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்த ஸ்டாலின் விஜயகாந்த்தின் உடல் நலம் குறித்து விசாரிக்க வந்ததாகக் கூறினார். 
 
இதையடுத்து முக அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி ’’இவ்வளவு நாட்களாக விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல்  இருந்தது தெரியிலையா’’ என்று அழகிரி ஸ்டாலினை சீண்டுவது போல கேள்வி கேட்டிருந்தார். இது திமுகவினரை எரிச்சலூட்டியது.
 
இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு சென்ற மோடியுடன் அழகிரியை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அதை சாதுர்யமாக தவிர்த்துவிட்டார்.
alakiri
ஆனால் நேற்று சென்னை சென்டிரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர் வைக்கப்படும் என்று மோடி அறிவித்தார். இந்த மெகா கூட்டணியின் தேர்தல் பரப்புரை அறிமுக விழா முடிவடைந்து மோடி டெல்லியை அடைவதற்குள்ளாகவே முக.அழகிரி மோடிக்கு ஒரு பாரட்டுக் கடிதம் எழுதி அனுப்பிவிட்டார்.அதில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
alakiri
இது சம்மந்தமாக அரசியல் வட்டாரங்களில் ..கருணாநியியை சிறப்பிக்கும் வகையில் ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை என்று முக.அழகிரி ஆதங்கத்தில் உள்ளதாகத் தெரிகிறது என்று தகவல் வெளியாகிறது.
 


இதில் மேலும் படிக்கவும் :