வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (12:02 IST)

மோடி சேலைகள் – சூரத்தில் அமோக விற்பனை !

தேர்தலை ஒட்டு மோடிப் படம் பொறித்த சேலைகள் தயாரிக்கப்பட்டு விறபனை ஆகி வருகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன.

தேர்தல் இன்னும் இரண்டு மாதத்தில் வர இருக்கிறது. எந்நேரமும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளில் மும்முரமாக உள்ளன. அதேப் போல தேர்தலை வைத்து வியாபாரிகளும் தங்கள் சந்தையை விரிவுப்படுத்த தொடங்கியுள்ளன.

துணி உற்பத்திக்கு பெயர்போன சூரத்தில் இப்போது மோடியின் உருவப்படம் பொரித்த புடவைகள் விற்பனை நடந்துவருகிறது. இதனைப் பெண்கள் மிகவும் விருப்பப்பட்டு வாங்கி அணிந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் புடவைகளை வாங்கும் பெண்கள் பெரும்பாலோனோர் பாஜகவிற்காக தேர்தல் பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த புடவைகளுக்குக் கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் படம் பொறித்த சேலைகளும் சந்தைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னால் நடைபெற்ற தேர்தல்களில் எல்லாம் தலைவர்கள் உருவம் பொதித்த டீஷர்ட்டுகளே அதிகளவில் வரவேற்பைப் பெற்றன. ஆனால் இந்தத் தேர்தலில் முதல் முதலாக பெண்களும் தலைவர்கள் படம் பொறித்த உடைகளை அணிய ஆர்வம் காட்டி வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.