செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (12:09 IST)

கெட் அவுட்: தேமுதிகவை விரட்டிவிட்ட திமுக

நேற்று தேமுதிக சுதீஷ் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர். 

 
இதுகுறித்து துரைமுருகனிடம் கேட்ட போது, சுதீஷ் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக தெரிவித்தாக குறிப்பிட்டார். மேலும், ஸ்டாலின் தற்போது ஊரில் இல்லை எனவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என தேமுதிகவிடம் கூறிவிட்டதாகவும் சொன்னார். 
 
இந்நிலையில் இன்று ஊரில் இருந்து திரும்பிய ஸ்டாலினுடன் அண்ணா அறிவாலயத்தில் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். அதாவது நேற்று தேமுதிகவினர் தெரிவித்த விருப்பத்தையும், தனது பதிலையும் விளக்கமாக தெரிவித்துள்ளார். 
ஆலோசனையின் முடிவில், வரும் 11 ஆம் தேதி திமுக எம்.எல்.ஏ, எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் எனவும், மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 
இதன் மூலம் தேமுதிகவிற்கு திமுகவில் இடம் இல்லை என சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஸ்டாலின்.