திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (11:51 IST)

நெருங்கிவந்த தேமுதிக, பத்திவிட்ட துரைமுருகன்: அப்செட்டான ஸ்டாலின்

கூட்டணி தொடர்பாக துரைமுருகனிடம் தேமுதிக மூத்த நிர்வாகிகள் பேசியது குறித்து ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
 
அதிமுக - தேமுதிக கூட்டணி தொகுதி பங்கீடுகள் இழுபறியிலேயே நீடித்து வரும் நிலையில் கடைசியாக 4 தொகுதிகள் தான் கொடுக்கமுடியும் என அதிமுக கூறிவிட்டது. 
 
இந்நிலையில் நேற்று தேமுதிக சுதீஷ் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர்.
 
இதுகுறித்து துரைமுருகன் பேசுகையில் ஸ்டாலின் தற்போது ஊரில் இல்லை எனவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என தேமுதிகவிடம் கூறிவிட்டதாக சொன்னார்.
 
இந்நிலையில் ஊரில் இருந்து திரும்பிய ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் தற்போது துரைமுருகனிடம் நேற்று தேமுதிகவிடம் நடைபெற்ற கலந்துரையாடல் பற்றி விசாரித்துக்கொண்டிருக்கிறாராம். எது எப்படி இருந்தாலும் தன்னை கேட்டுவிட்டு துரைமுருகன் தேமுதிகவிடம் இப்படி பேசியிருக்கலாம் என ஸ்டாலின் நினைப்பதாக திமுகவை சார்ந்தவர்கள் கூறுகின்றனர்.