திமுக சார்பில் அழகிரி போட்டியா? இது லிஸ்ட்லையே இல்லையே!! வெளியான அதிர்ச்சி தகவல்
திருவரூரில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் திமுக சார்பில் அழகிரி நிறுத்தப்படலாம் என தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.
திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ஆம் தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது. கஜா புயல் நிவாரணத்தை காரணம் காட்டி தேர்தலை தள்ளிவைக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்கள் குறித்து அந்தந்த கட்சிகள் மும்மரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. தற்பொழுது நிலவரப்படி எஸ்.காமராஜ் என்பவர் அமமுக சார்பில் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் தேர்தல் குறித்து பேசிய தினகரன் ஆதரவாளரும், அமமுக நிர்வாகியுமான புகழேந்தி, திருவாரூரில் திமுக சார்பில் அழகிரி போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். எது எப்படியாயினும், யார் போட்டியிட்டாலும் ஆர்.கே.நகரை போல அமமுக திருவாரூரில் கண்டிப்பாக வெற்றிபெறும் என கூறினார்.