திருவாரூர் தொகுதியின் அமமுக வேட்பாளர் அறிவிப்பு
திருவாரூர் தொகுதியின் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகிவிட்ட நிலையில் இன்று முக்கிய கட்சிகளான அதிமுக, திமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் தங்கள் கட்சியின் வேட்பாளரை அறிவிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சற்றுமுன்னர் திருவாரூர் தொகுதியின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளரை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இந்த தொகுதியில் எஸ்.காமராஜ் என்பவர் அமமுக சார்பில் போட்டியிடுகிறார்.
திருவாரூர் தொகுதியின் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜ் அவர்கள் மன்னார்குடி தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வமாக திருவாரூர் அமமுக வேட்பாளர் எஸ்காமராஜ் வரும் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக அக்கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன.