1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Alagiri refuses to answer on joining in DMK

என்ன கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள்: விரக்தியில் அழகிரி

திமுக
திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அழகிரிக்கும் ஏற்பட்ட பொரச்சனை காரணமாக அழகிரி கட்சியில் இருந்து கடந்த 2014 ஆம் ஆண்டு நீக்கப்பட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் கட்சியின் செயல்பாடுகளை குறித்து விமர்சித்து வந்தார். 
 
கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் கட்சியில் இணைய தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால், ஸ்டாலின் இதை ஏற்கவில்லை. இதனால், மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுவோம் என்று எதிர்பார்த்திருந்த அழகிரிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 
 
அமைதி பேரணியை தொடர்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அழகிரி ஆலோசித்து மேற்கொண்டுள்ளார். கலைஞர் எழுச்சி பேரவை என்ற பெயரில் புதிய அமைப்பை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகிறது. ஆனால், இதை அவர் மறுத்துள்ளார். 
 
இந்நிலையில், இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது, கட்சியில் உங்களை சேர்த்துக்கொள்ளாதது ஏன் என கேட்கப்பட்டது. அதற்கு, திமுகவில் என்னை ஏன் சேர்க்கவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள், அவர்களிடம் கேளுங்கள் என்று கூறி சென்றுவிட்டார். 
அடுத்த கட்டுரையில்
கேரள கன்னியாஸ்திரி கற்பழிப்பு வழக்கில் திடீர் திருப்பம்