தொடர்புடைய செய்திகள்
- அழகிரி மனைவி கொடுத்த பலே ஐடியா : ஆடிப்போன கருணாநிதி குடும்பம்
- இருக்கு.. அழகிரிக்கிட்ட ஒரு பவர் இருக்கு! செல்லூர் ராஜூ பேட்டி
- அழகிரி பேரணி குறித்த செய்திகள் வெளிவராமல் இருக்கவே இந்த சிபிஐ ரைய்டு: தம்பிதுரை
- கலைஞரை மிரட்டி என்னை கட்சியிலிருந்து நீக்கினார்கள் - அழகிரி பரபரப்பு பேட்டி
- ஸ்டாலினுக்கு பதவிகள் எப்படி கிடைத்தது? அவரின் மனசாட்சிக்கு தெரியும் - அழகிரி
தன்னை பாராட்டிய செல்லூர் ராஜூ வீட்டிற்கு சென்ற அழகிரி....
அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்று அவரை அழகிரி சந்தித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ “அழகிரியிடம் ஒரு ஆற்றல் இருக்கிறது. அதனால்தான், ஆயிரக்கணக்கானோர் அவர் நடத்திய பேரணியில் கலந்து கொண்டனர். இது அவருக்கு ஆதரவு இருப்பதை காட்டுகிறது” என பாராட்டி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று காலை மதுரையில் உள்ள செல்லூர் ராஜூவின் வீட்டிற்கு சென்ற அழகிரி அவரை சந்தித்து பேசினார். அப்போது, மரணமைடந்த செல்லூர் ராஜூவின் தாயின் உருவ படத்திற்கு அவர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின் சிறுதி நேரம் அவரிடம் பேசிவிட்டு அழகிரி அங்கிருந்து கிளம்பி சென்றார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி “செல்லூர் ராஜூவின் தாய் மரணமடைந்ததால் விசாரிக்க வந்தேன். நீங்கள் நினைப்பது போல் ஒன்றுமில்லை” எனக்கூறி விட்டு சென்றார்.
அடுத்த கட்டுரையில்
