வியாழன், 22 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 8 செப்டம்பர் 2018 (11:44 IST)

ஸ்டாலினுக்கு பதவிகள் எப்படி கிடைத்தது? அவரின் மனசாட்சிக்கு தெரியும் - அழகிரி

ஸ்டாலினுக்கு பதவிகள் எப்படி கிடைத்தது? அவரின் மனசாட்சிக்கு தெரியும் - அழகிரி
சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அழகிரி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

 
திமுகவில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அழகிரி சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் பேரணியும் நடத்தினார். 
 
இந்நிலையில், ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், அப்போது, அந்த நிருபர் நீங்கள் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அழகிரி “நான் ஸ்டாலினுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதால்தான் திமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கேட்கிறேன். இதற்கு முன் பல தேர்தல்களில் அவரும் நானும் இணைந்து பணியாற்றியுள்ளோம்.  என் தந்தை கருணாநிதி நிற்கும் திருவாரூர் தொகுதியிலும் நான் தேர்தல் பணிகளை செய்துள்ளேன்” என பதிலளித்தார். 
 
மேலும், என்னை சேர்த்துக்கொண்டால் திமுக வலிமை அடையும். இல்லையெனில், திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களில் திமுக வெற்றி பெறாது. அந்த தொகுதிகளில் நான்காம் இடத்திற்கே திமுக செல்லும். என்னை கட்சியிலிருந்து விலக்கிய பின் எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை என அவர் தெரிவித்தார்.
 
அதேபோல், துணை முதல்வர்  மற்றும் பொருளாலர் பதவிகள் ஸ்டாலினுக்கு எப்படி கிடைத்தது என அவர் தனது மனசாட்சி தொட்டு சொல்ல வேண்டும். அதை நான் சொல்ல மாட்டேன். அவரின் மனசாட்சிக்கு தெரியும் என அவர் அந்த பேட்டியில் கூறினார்.