நாளை மறுநாள் முதல் அக்கினி வெயில்! – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில் நாளை மறுநாள் முதல் அக்கினி வெயில் தொடங்க உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பல இடங்களில் வெயில் வாட்டி வருகிறது. பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் பலர் மலைவாச ஸ்தலங்கள், அருவிகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் நாளை மறுநாள் முதல் அக்கினி வெயிலின் தாக்கம் ஆரம்பமாக உள்ளது. இந்த அக்கினி வெயில் காலங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் நண்பகல் வேளைகளில் மக்கள் வெளியில் வருவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் வெயிலை தணிக்க இளநீர், நுங்கு, பழச்சாறு போன்றவற்றை அருந்துவதன் மூலம் உடல்நலம் பாதிக்காமல் இருக்கும் என உடல்நல ஆலோசகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.