புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 1 மே 2022 (12:16 IST)

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் குளிர்காலம் முடிந்து கோடைகாலாம் தொடங்கியுள்ளது. ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கோடை வெயில் பல இடங்களில் 100 டிகிரியை எட்டியுள்ளது.

இந்நிலையில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலின் தெற்கு அந்தமான் பகுதியில் வருகிற 4ம் தேதி உருவாகும் மேலடுக்கு சுழற்சி 6ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், பின்னர் அடுத்த 24 மணி நேரத்தில் அது மேலும் தீவிரம் அடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.