புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By siva
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (19:19 IST)

அனைவரும் வாக்களிக்களியுங்கள்: கவிஞர் வைரமுத்து வெளியிட்ட வீடியோ!

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நாம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல திரையுலக பிரபலங்கள் தங்களது பேஸ்புக் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்
 
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: வாக்களித்தல் என்பது உங்கள் உரிமை மட்டுமல்ல, அதிகாரம். அதிகாரத்தை கொடுக்கும் அதிகாரம்
 
அன்பை கொடுக்க சிந்திக்கத் தேவையில்லை, அதிகாரத்தை கொடுக்க சிந்திக்கவேண்டும். வாக்களிக்கும் முன் சிந்திக்க மறுக்காதீர்கள், சிந்தித்தபின் வாக்களிக்க தவறாதீர்கள். இவ்வாறு அந்த வீடியோவில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது