செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 23 ஜூன் 2022 (11:09 IST)

ஓபிஎஸ் வெளியே போ: அதிமுக தொண்டர்கள் முழக்கத்தால் பரபரப்பு

AIADMK
சென்னை அருகே வானகரம் என்ற பகுதியில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது
 
இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள எடப்பாடி பழனிசாமி வந்தபோது அவரை வாழ்த்தி வரவேற்ற அதிமுக தொண்டர்கள், ஓ பன்னீர்செல்வம் வந்தபோது வெளியே போ என முழக்கமிட்ட தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அதிமுக பொதுக்குழு நடைபெறும் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் அதிகம் இருப்பதாகவும் அதனால் எடப்பாடி பழனிச்சாமி வந்தபோது அவரை வரவேற்ற அதிமுக தொண்டர்கள் வந்தபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக முழக்கங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வதில் உறுதியாக ஓபிஎஸ் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்