1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜூன் 2022 (10:04 IST)

அதிமுக பொதுக்குழு - போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி!

அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில் மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

 
அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. காலை 10 மணிக்கு தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் கூட்டம் நடக்கிறது. நடக்கும் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
 
இந்நிலையில் அதிமுக பொதுக்குழு நடக்கவுள்ள நிலையில் மதுரவாயல், வானகரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோயம்பேடு மேம்பாலத்தில் இருந்து மதுரவாயல் வரை வாகனங்கள் மெல்ல நகரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
போக்குவரத்து நெரிசல் காரணமாக ஓபிஎஸ், ஈபிஎஸ் வருவதே சற்று தாமதமான நிலையில் பொதுக்குழு 11 மணிக்கு துவங்கும் என தெரிகிறது.