வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 7 பிப்ரவரி 2024 (14:02 IST)

ஆண்களுக்கும் இலவச பேருந்துகள் வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

ஆண்களுக்கும் இலவச பேருந்துகள் வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால்  நாடு முழுவதும் உள்ள தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை ஆயத்தப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள முக்கிய எதிர்க்கட்சியான பாமக கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இக்கட்சி பாஜகவுடன் கூட்டணியில் சேருமா? இல்லை அதிமுகவுடன் இணையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகளிருக்கு வழங்குவதைப் போல சென்னையில் ஆண்கள் அனைவருக்கும் இலவச பேருந்துகள் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும்,  பிறகு படிப்படியாக வாய்ப்புள்ள இடங்களில் இதனை விரிவுபடுத்த வேண்டும் அப்போதுதான் பொது போக்குவரத்து அதிகம் பயன்படுத்துவார்கள். மாசு பிரச்சனையால் சென்னையில் ஆண்டிற்கு 4 ஆயிரம்பேர் இறக்கும் சூழல் உள்ளது. இதனைத்தவிர்க்க தமிழக அரசு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.