வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 ஏப்ரல் 2018 (20:43 IST)

#பல்லுபடாதஅதிமுக: டுவிட்டர் டிரெண்டிங்; பின்னணி என்ன?

பல்லுபடாத அதிமுக என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்ல் உள்ளது. இதர்கு முன்னர் இது போன்று இடுப்புகிள்ளி திமுக என்ற தமிழ் ஹேஷ்டேக் டிரெண்ட்ங்கில் இருந்தது. 
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் போரட்டம் நடத்தப்பட்ட போது, இடுப்புகிள்ளி திமுக டிரெண்டிங்கில் இருந்தது. 
 
போராட்டத்தின் போது கரூரை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவரின் இடுப்பை திமுக நிர்வாகி ஒருவரே கிள்ளிவிட்டதாக புகார் வந்தது. இதனால் இந்த ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. 
 
தற்போது இதற்கு பழி வாங்கும் விதமாக பல்லுபடாத அதிமுக என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டாக்கி விடப்பட்டுள்ளது. இந்த ஹேஷ்டாக் நான்காம் இடத்தில் உள்ள நிலையில், #Sterlite, #NadigarSangam, #Rajinikanth ஆகிய ஹேஷ்டேக்குகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.