வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 ஏப்ரல் 2018 (13:44 IST)

பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடியும் ஆதரவாக பச்சை கொடியும்: பரபரப்பில் தமிழகம்

பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடியும் ஆதரவாக பச்சை கொடியும்: பரபரப்பில் தமிழகம்
சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் வரும் 11ஆம் தேதி ராணுவ கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட பாரத பிரதமர் நரேந்திரமோடி சென்னைக்கு வருகை தரவுள்ளார். சென்னையில் இருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் செல்வதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புக்கொடியை கட்ட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார். 
 
இந்த நிலையில் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் திட்டத்திற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி திமுகவினர் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்டினால், அதிமுகவினர் பச்சை கொடி காட்டுவோம் என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
 
பிரதமருக்கு எதிராக கருப்புக்கொடியும் ஆதரவாக பச்சை கொடியும்: பரபரப்பில் தமிழகம்
அதேபோல் பிரதமருக்கு கருப்புக்கொடி காட்டும் மு.க.ஸ்டாலின் யோசனைக்கு பாஜக தலைவர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.