புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?

அதிமுக பொது குழு இன்று கூடுகிறது.. ஓபிஎஸ்சை இணைக்க ஈபிஎஸ் சம்மதமா?
நீண்ட இடைவெளிக்கு பிறகு அ.தி.மு.க. பொதுக்குழு, கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று கூட உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலை தற்போது நிலவி வரும் நிலையில், இந்த பொதுக்குழு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
குறிப்பாக, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைப்பது குறித்து முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும், பாஜக தலைமை அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஓ.பி.எஸ். உட்பட கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை சேர்த்துக்கொள்ள எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, பிரிந்தவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறியபோது, பொதுக்குழுவில் இதுகுறித்து விரைவில் முடிவு எடுப்போம் என்று அவர் பதிலளித்ததாகவும் கூறப்பட்டது.
 
சென்னை வானரகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடும் அ.தி.மு.க. பொதுக்குழுவில் பல பரபரப்பான திருப்பங்கள் ஏற்படலாம் என்று கூறப்படுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva