வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 9 ஜனவரி 2021 (08:17 IST)

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பற்றி பேச்சு வருமா??

பரபரப்பான அரசியல் சூழலில், சென்னையில் இன்று கூடுகிறது அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறுகிறது. 

 
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இன்று காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு அதிமுக நிர்வாகிகள் வர துவங்கியுள்ளனர். 
 
இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவின் அதிகாரங்களுக்கு ஒப்புதல் பெறப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தேர்தல் கூட்டணி, எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் இடம்பெறும் என்பது பற்றி ஆலோசிக்க வாய்ப்பு. அதிமுக பொதுக்குழுவில் சசிகலா பற்றிய எந்த பேச்சும் வெளிப்படையாக இருக்காது என கூறப்படும் நிலையில் சசிகலாவால் அதிமுகவுக்கோ, ஆட்சிக்கோ எந்த இடையூறும் வராது என புகழேந்தி தெரிவித்துள்ளார்.