1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sasikala says she will rule ADMK soon

என்னை அதிமுக சேர்க்க மறுக்க அவர்கள் யார்? – சசிகலா அதிரடி!

Sasikala
நீண்ட காலமாக சசிகலா அதிமுகவில் இணைவாரா என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் விரைவில் அதிமுக தலைமையை ஏற்க போவதாக சசிக்கலா தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுசெயலாளராக இருந்த சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு விடுதலையான சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்வார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லை என்றும், இணைக்க வேண்டும் என்றும் அதிமுகவிலேயே இருவேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில் அதிமுகவில் உள்ள தனது ஆதரவாளர்களை அடிக்கடி சசிகலா சந்தித்து பேசி வருகிறார்.

இந்நிலையில் தற்போது தான் அதிமுகவிற்கு விரைவில் தலைமை தாங்க உள்ளதாக சசிகலா பேசியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “அதிமுகவில் ஒரு சிலர்தான் என்னை எதிர்க்கின்றனர். பலர் என்னுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். என்னை அதிமுகவில் இணைத்துக் கொள்ள மாட்டேன் என்று சொல்ல அவர்கள் யார்? எனது தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படும் என எனக்கு 100 சதவீத நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்து கடவுளை இப்படியா கொச்சைப்படுத்துவது? – ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!