வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 3 ஜூலை 2021 (18:47 IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ..குவியும் புகார்கள்

தமிழகத்தில் சில பள்ளிகளில் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஷேசாத்ரி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள், மற்றும் தனியார் பள்ளி தாளாளர் சிவசங்கர் பாபா உள்ளிட்டோர் மீது புகார் எழுந்ததை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி பிஷப்  கீப்பர்  கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் அங்கு படிக்கின்ற மாணவிகளுக்கு பாலியல் தொல்லை செய்தததாக  5 மாணவிகள் கடிதம் மூலம்  கல்லூரி  நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணையில் பேராசிரிய பால் சந்திரமோகன் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு  ஆதரவாக பேராசிரியை நளினி என்பவர் இருந்துள்ளார். எனவே தற்போது கல்லூரி நிர்வாகம் பால் சந்திரமோகனை பணியிடை நீக்கம் செய்துள்ளது.  தமிழக அளவில் மிகப்பெரிய கல்வி நிறுவனமாகச் செயல்படும் பிஷப் கீப்பர் கல்லூரியில் இத்தகைய நிகழ்வு நடந்துள்ளதும் பெருதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.