1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 21 ஆகஸ்ட் 2024 (14:02 IST)

பிரசாந்த்லாம் வேணாம்ய்யா… அவரு எல்லாம் வரும்போதே ஸ்டாருய்யா- விஜய் சொன்ன காரணத்தைப் பகிர்ந்த வெங்கட்பிரபு!

இந்த ஆண்டில் வெளியாகவுள்ள முன்னணி நடிகர்களின் படங்களில் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக உருவாகி வருகிறது விஜய்யின் GOAT திரைப்படம். இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக கிராபிக்ஸ் பணிகள் உட்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆனது. ஆகஷன், செண்ட்டிமெண்ட், நகைச்சுவை என வழக்கமான விஜய்யின் மாஸ் மசாலா படமாக கோட் இருக்கும் என்பதை டிரைலர் கோடிட்டு காட்டுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் டி ஏஜிங் லுக் சில வினாடிகளே வந்து சென்றது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு அளித்துள்ள ஒரு நேர்காணலில் படத்தில் பிரசாந்த் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்க வந்தது குறித்து பயந்தாராம். இதுபற்றி “என்னய்யா பண்ணுற… வேணாம்ய்யா.. இவ்வளவு பேர வச்சிகிட்டு படம் எடுத்துடுவிய்யான்னு கேட்டார். பிரசாந்த் நடிக்க வரும்போதே ஸ்டாருய்யா” என்றார். ஆனால் நான் “சார், அவங்க கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லன்னா நடிக்க ஒத்துப்பாங்களா?” எனக் கேட்டு அவரை சம்மதிக்க வைத்தேன்” எனக் கூறியுள்ளார்.