1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (22:39 IST)

கரூரில் அதிமுக - வின் 51 வது ஆண்டு தொடக்க விழா

admk
கரூரில் அதிமுக - வின் 51 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு வி கா அவர்கள் பேரறிஞர் அண்ணா,  புரட்சி தலைவர், புரட்சி தலைவி அம்மா அவர்களின்  திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
 
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழா நிறைவு மற்றும் 51 - வது ஆண்டு தொடக்க விழா தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களின் சார்பில்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
 
இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டம் கரூர் லைட் ஹவுஸ் கார்னர் பகுதியில் கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவ சிலைக்கு முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளர் திரு எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் ஆலோசனை படி கரூர் மாவட்ட கழக அவைத்தலைவர் திரு வி கா தலைமையில்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
 
தொடர்ந்து அதிமுக மாவட்ட கட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கழக இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், மாவட்ட கழக பொருளாளர் கண்ணதாசன், கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் முத்துக்குமார், கரூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் பாலமுருகன், பகுதி செயலாளர்கள் விசிகே ஜெயராஜ், அண்ணமார் தங்கவேல், சக்திவேல், சேரன் பழனிச்சாமி, ஆண்டாள் தினேஷ், சுரேஷ், ஒன்றிய செயலாளர்கள் கமலகண்ணன், என்.எஸ்.கிருஷ்ணன், மார்கண்டேயன், எம்.ஆர்.கே.செல்வகுமார், சேகர், ஈஸ்வரமுர்த்தி, கலையரசன், ரங்கசாமி, கடவூர் ரமேஷ், கைலாசம், நகர செயலாளர்கள் விவேகானந்தன், மணிகண்டன், சாதிக் பாட்ஷா உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, சார்பு அணி நிர்வாகிகள், வார்டு, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.