தொடர்புடைய செய்திகள்
- அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை - எங்கு தெரியுமா?
- அக்னிவீர் ராணுவ படையில் சேர விண்ணப்பிக்கலாம்..! – எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- அக்னிபாத் விமானப்படையில் சேர 7.49 லட்சம் விண்ணப்பங்கள்! – விமானப்படை அறிவிப்பு!
- தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இலவச சிறப்பு வகுப்பு! – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!
- தமிழகத்தில் இன்றும் 2500ஐ தாண்டியது கொரோனா பாதிப்பு!
தமிழகத்தில் அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம்: தேதி அறிவிப்பு!
தமிழகத்தில் முதல்கட்டமாக அக்னி வீரர்களுக்கான தேர்வு முகாம் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நாகர்கோவிலில் நடைபெற உள்ளது
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தமிழகத்தில் முதல் கட்டமாக அக்னி வீரர்கள் தேர்வு முகாம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது
ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, அரியலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இந்த முகாமில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
மேலும் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஜூலை 30ஆம் தேதிவரை joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அடுத்த கட்டுரையில்
