1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Tamil Nadu to have heavy rain

அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை - எங்கு தெரியுமா?

கனமழை
நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல். 

 
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதன்படி நீலகிரி மற்றும் கோவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
 
அதோடு சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
நடக்க போவது அதிமுக பொதுக்குழு கூட்டம் அல்ல... பின்ன வேறு என்ன??