1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

இன்று முதல் அக்னி நட்சத்திரம்: மக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்!

Agni Nakshatram
அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
ஒவ்வொரு வருடமும் கோடை வெயில் அக்னி நட்சத்திரம் 24 நாட்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் மே 4ஆம் தேதியான இன்று ஆரம்பிக்கும் அக்னி நட்சத்திர கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் கடுமையாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து குழந்தைகள் முதியவர்கள் மற்றும் நோயாளிகள் பகல் 11 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வெளியே வரவேண்டாம் என்றும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
மேலும் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் நீர் சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது