சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி: பள்ளிகள் நேரம் மாற்றம்
சுட்டெரிக்கும் வெயில் காரணமாக பள்ளி நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ஒடிசா, மாநிலம் அறிவித்துள்ளது
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடும் வெயில் கொளுத்தி வருகிறது என்பதும் இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
குறிப்பாக வடமாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெயில் காரணமாக ஏற்படும் வெப்பத்தின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதி உள்ளனர்
இந் நிலையில் ஒடிசாவில் உள்ள பள்ளிகள் செயல்படும் நேரம் வெயில் காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது
நாளை முதல் காலை 6 மணி முதல் 9 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என ஒடிசா கல்வித்துறை அறிவித்துள்ளது
வெயில் காரணமாக மூன்று மணி நேரம் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது அம்மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது