தொடர்புடைய செய்திகள்
- குழந்தை கடத்தல் - வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது
- மனநோயாளி கொலை வழக்கில் 10 பேர் கைது - போலீஸார் அதிரடி
- குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் ஓராண்டு ஜெயில் - போலீசார் எச்சரிக்கை
- குழந்தை கடத்தல் என நம்பி மனநோயாளி அடித்துக்கொலை - தொடரும் சம்பவங்கள்
- குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து தாக்குதல் - மூதாட்டி பலி
திருவள்ளூரில் மீண்டும் பரபரப்பு; குழந்தை கடத்தல் என மனநலம் பாதிக்கப்பட்டவர் மீது தாக்குதல்
திருவள்ளுர் அருகே மீண்டும் குழந்தையை கடத்த வந்ததாக கருதி மனநலம் பாதிக்கப்பட்டவரை கண்மூடி தனமாக தாக்கியவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் கிராமத்தில் குழந்தையை கடத்த வந்ததாக கருதி மனநலம் பாதிக்கப்பட்ட முத்து பட்டுராஜ் என்ற இளைஞரை அப்பகுதியை சேர்ந்த சிலர் கண்மூடி தனமாக அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த முத்து பட்டுராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய நபர்களை தலைமறைவானதை அடுத்து, வாட்ஸ்அப்பில் வெளியான வீடியோ காட்சிகளை வைத்து அவர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
தற்போது ஒய்திருந்த வதந்தி மீண்டும் பரவி வருவதால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடர் தாக்குதலை அடுத்து திருவள்ளுரில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
