வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 11 மே 2018 (18:26 IST)

கீர்த்தி சுரேஷ் பற்றி சாவித்ரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி கருத்து

‘கீர்த்தி சுரேஷ் நடந்து வரும்போது என் அம்மா நடந்து வருவது போலவே இருக்கும்’ என சாவித்ரி மகளான விஜய சாமுண்டீஸ்வரி தெரிவித்துள்ளார். 
நாக் அஸ்வின் இயக்கத்தில் இன்று ரிலீஸாகியுள்ள படம் ‘நடிகையர் திலகம்’. பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தான் இந்தப் படம்.  தெலுங்கில் ‘மகாநடி’ என்ற பெயரில் இரண்டு நாட்களுக்கு முன்பே இந்தப் படம் ரிலீஸாகிவிட்டது. சாவித்ரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.
 
“ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்பும், ஷூட்டிங் தொடங்கிய பின்னரும் கீர்த்தி சுரேஷ் என்னிடம் அடிக்கடி போனில் பேசுவார். அம்மாவின் நடை, உடை, பாவனைகள் எப்படியிருக்கும் எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார். அம்மா எப்படி சாப்பிடுவார் என்பது முதற்கொண்டு அனைத்தையும் கேட்டார்.
நான் இரண்டு முறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்குச் சென்றிருந்தேன். கீர்த்தி சுரேஷ் ஷாட் முடிந்து என்னைப் பார்க்க வரும்போது, என் அம்மாவே என்னை நோக்கி  வருவது போல இருக்கும். என் அம்மாவைப் போல நடந்து கொள்ளும் ஆற்றல் கீர்த்தியிடம் இயல்பாகவே இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் சாவித்ரியின்  மகளான விஜய சாமுண்டீஸ்வரி.