வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 9 ஜூன் 2023 (11:01 IST)

விழுப்புரத்தை அடுத்து கரூரிலும் கோயிலுக்கு சீல் வைப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

விழுப்புரம் அருகே மேல்பாதி என்ற பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது கரூர் அருகே ஒரு கோயிலும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலில் இளைஞரை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் கோயிலை பூட்டி வருவாய் துறையின் சீல் வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இது குறித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் கோட்டாட்சியர் தலைமையில் கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே விழுப்புரம் அருகே திரெளபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு கோவில் சீல் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran