வியாழன், 10 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 25 பிப்ரவரி 2024 (14:50 IST)

விஜயதாரிணி ராஜினாமா ஏற்பு.. பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தலா?

vijayadharani
விளவங்கோடு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி நேற்று திடீரென பாஜகவில் சேர்ந்ததை அடுத்து அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். 
 
இது குறித்து சபாநாயகர் அப்பாவு அவர்களுக்கு அவர் கடிதம் எழுதிய நிலையில் அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டு விட்டதாக சபாநாயகர் அப்பாவு சற்று முன் தெரிவித்தார். 
 
மேலும் விளவங்கோடு தொகுதி காலியாக உள்ளது என அறிவிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்பாவு  கூறினார். விளவங்கோடு தொகுதி காலி என அறிவிக்கப்பட்டு விட்டால் மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு  தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. 
 
ஏற்கனவே முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ பதவி இழந்ததால் அவர் போட்டியிட்ட திருக்கோவிலூர்  தொகுதிக்கும் இடைத்தேர்தல் பாராளுமன்ற தேர்தலுடன் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva