பிரதமரிடம் பேசியது என்ன? டெல்லியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக பேட்டி!

ops eps
பிரதமரிடம் பேசியது என்ன? டெல்லியில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் கூட்டாக பேட்டி!
siva| Last Updated: திங்கள், 26 ஜூலை 2021 (14:37 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இன்று காலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் பிரதமருடனான சந்திப்புக்குப் பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வலியுறுத்துகிறோம் என்றும் மேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தினோம் என்றும் கூறினார்கள்

மேலும் மேகதாது அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டங்கள் சுடுகாடு ஆகிவிடும் என்று தெரிவித்தோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தினோம் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்

மேலும் சசிகலா குறித்த கேள்விக்கு பதிலளிக்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவருமே மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மேலும் படிக்கவும் :